தொலைநோக்கு
சிறந்த முகாமைத்துவம் மற்றும் உற்பத்தித்திறன் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கையில் சிறந்தவர்களாக விளங்குதல்.
பணிக்கூற்று
அரச கொள்கைகளுக்கு இணங்க சேவைகளை வழங்குதல், வளங்களைத் திரட்டுதல் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் திறமையான, நிலையான மற்றும் திட்டமிடப்பட்ட வளர்ச்சி செயல்முறையின் மூலம் அப்பகுதி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.
அமைவிடம்
வவுனியா தெற்கு பிரதேச செயலகமானது வவுனியா மாவட்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது, இது வட மாகாணத்திற்கான நுழைவாயில் ஆகும். இப்பிரிவின் வடக்கு வவுனியா பிரதேச செயலகபிரிவினாலும், கிழக்கு திருகோணலை மாவட்டத்தினாலும்,மேற்கு வெங்கசெட்டிகுளம் பிரதேச செயலகபிரிவினாலும்,தெற்கு அனுராதபுர மாவட்டத்தினாலும் சூழப்பட்டுள்ளது. இப்பிரிவானது 188.5 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பணை கொண்டுள்ளது, இது மொத்த வவுனியா மாவட்டத்தின் 9.6 சதவீதமாகும். இப்பிரதேச செயலகத்தின் பெரும்பான்மை சிங்கள மக்களிற்குரியது.
வவுனியா தெற்கு பிரதேச செயலகமானது 20 கிராமசேவகர் பிரிவுகளுள் முறையே 91 கிராமங்களை உள்ளடக்கியது. கடந்த 2022 மார்கழி வரை இங்கு 16617 பேரை கொண்ட 5861 குடும்பங்கள் உள்ளன.
| பெயர் |
தொடக்கம் |
வரை |
| ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க | ||
| ஆர்.கே.எஸ்.எஸ்.சீ. விஜேசிங்க | ||
| எச்.எம். தர்மபால | ||
| பி. திலகரத்ன | ||
| டி.எம்.ஆர்.பி. தசநாயக | 2011 | |
| எம்.எஸ். ஜானக | 2011 | இன்று வரை |















